Breaking News

இளம் பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபர் கைது.. மதுரை சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை

மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு சோழவந்தான் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் ஒன்றினை அனுப்பினார்.. அதில் தமது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாச வீடியோக்கள்,மற்றும் போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளார்,எனவும் இதனால் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும்,ஆகவே சம்மந்தப்பட்ட நபரை கண்டறிந்து உரிய சட்ட  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்திருந்தார்..


அதனைத் தொடர்ந்து அந்த மர்ம நபரை பிடிக்க சைபர் கிரைம் குற்றத்தடுப்பு பிரிவு  மாவட்ட கூடுதல் காவல்  கண்காணிப்பாளர் மணி தலைமையில் சைபர் கிரைம் ஆய்வாளர் பொன்மீனா உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை ஒன்றினை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவு பிறப்பித்து,நடவடிக்கையை முடுக்கி விட்டார்

சம்மந்தப்பட்ட நபரின்  செல் போன் நீண்ட நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையிலும், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீவிர விசாரணையில் இறங்கிய சைபர் கிரைம் குழுவினர் இது தொடர்பாக மதுரை சோழவந்தான் ஓட்டு பச்சேரி பகுதியை சேர்ந்த சி. முருகன் என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

தீவிர விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சிவபிரசாத், 

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தகுந்த விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும் எனவும், மேலும் யாராவது சைபர் குற்றங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டிருந்தால் சற்றும் அச்சமோ, தயக்கமோ,இன்றி மதுரை மாவட்ட சைபர் குற்றத்தடுப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்து உரிய நிவாரணம் பெறலாம் எனவும் மேலும் நேரில் வர தயக்கம் இருந்தால் இந் தியா முழுமைக்குமான சைபர் கிரைம் நம்பரான 1930 என்ற இந்த கட்டணமில்லா தொலை பேசி எண்ணில் தகவல் அனுப்பியும் கூட உரிய பயனடையலாம் எனவும், புகார் அளித்தவர் குறித்து தகவல்கள் வெளியே தெரியாதவாறு ரகசியம் காக்கப்படுவதோடு, தகவல் கிடைத்த சற்று நேரத்திலேயே சைபர் கிரைம் குற்றத் தடுப்பு போலீசார்  களமிறங்கி  நடவடிக்கையில்  ஈடுபடுவார்கள் எனவும், ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் நேரிலோ அல்லது தொலை பேசி மூலமாகவோ புகார் தர அறவே தயங்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments

Thank you for your comments