ஆதவபாக்கம் அருகே செய்யாற்று பாலத்தை உத்திரமேரூர் எம்.எல்.ஏ சுந்தர் நேரில் ஆய்வு...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவப்பாக்கம் ஊராட்சிக்கு அருகில் கன மழையால் துண்டிக்கப்பட்ட செய்யாற்று பாலம் ஏற்கனவே கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது.
இருப்பினும் தற்காலிக பாதை அதிக வெள்ளத்தின் காரணமாக தடைபட்டுள்ளதை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது உத்திரமேரூர் ஒன்றிய கழக செயலாளர் கெ.ஞானசேகரன், உத்திரமேரூர் பேரூர் மன்ற தலைவர் சசிகுமார் உத்திரமேரூர் பேரூர் கழக செயலாளர் என். எஸ் . பாரிவள்ளல் உத்திரமேரூர் ஒன்றிய கழக அவை தலைவர் சுப்பராயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஆய்வின் போதூ உனிருந்தனர்.



No comments
Thank you for your comments