Breaking News

நகரமைப்பு அலுவலர் வேலாயுதம் ஒரு சமையல் அறைக்கு 60 ஆயிரம் லஞ்சம்... கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் அம்பலம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அருகாமையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் உத்தரவின் பெயரில் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 



ஆவடியில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வினோஜ் பி செல்வம் கலந்து கொண்டார் 

இந்த நிகழ்ச்சியில் பால் விலை மற்றும் மின்சாரம் சொத்து வரி அதிக அளவில் ஏற்றப்பட்டதால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின எனவே இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர் 



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவடி மாநகராட்சியில் ஊழல் குறித்தும் கோஷங்கள் எழுப்பினர் ஆவடி மாநகராட்சியில் பொறியாளர் பிரிவில் கட்டப்பட்டு வரும் மழை நீர் கால்வாய் மற்றும் கடந்த ஆட்சி காலத்தில் வாட்டர் சின்டெக்ஸ் டேங்க் இதில் கோடி கணக்கில் ஊழல் நடந்திருப்பதாகவும் நகரமைப்பு பிரிவில் நகரமைப்பு அலுவலர் வேலாயுதம் ஒரு சமையல் அறைக்கு 60 ஆயிரம் லஞ்ச பணமாக கேட்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் குமார் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மண்டல பொறுப்பாளர்களும் தொண்டர்களும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments