வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி மாணவி பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் “டாக்கத்தான்” என்ற பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் சார்பாக11-ஆம் வகுப்பு மாணாவி சௌபர்ணிகா கலந்து கொண்டு "சுதந்திர இந்தியாவின் நம்ப முடியாத பெண்கள்” என்ற தலைப்பில் தொடர்ந்து 7 நிமிடங்கள் உரையாற்றி முதல் பரிசும், ரூ.15,000 பரிசுத் தொகையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணாவியையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் எஸ்.எஸ்.கந்தசாமி, தாளாளர். எஸ்.டி. சந்திரசேகர், சி.பாலசுப்ரமணியம் முதன்மை முதல்வர் நல்லப்பன், பள்ளியின் ஆலோசகர் எஸ்.பிரேமலதா, முதல்வர் வி.பிரியதர்சினி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments