Breaking News

புலவர் தெய்வசிகாமணி நினைவு நாளையொட்டி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்...

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் புலவர் தெய்வசிகாமணி நினைவு நாளையொட்டி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தராம்பிகை உடனுரை கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவு மண்டபத்தில் முசரவாக்கம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் புலவர் ந. தெய்வசிகாமணி நினைவு நாளை ஒட்டி திருக்குறள் வாசிக்கும் மாணவ மாணவிகள் 40 பேருக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் அவரது துணைவியார் கற்பகம் மற்றும் மகன் மதிவாணன் ஆகியோர் நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி முன்னாள் பொது மேலாளர் சிவகுமரன் சிறப்பாக செய்திருந்தார்

No comments

Thank you for your comments