Breaking News

வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட 10 நபர்கள் அதிரடி கைது... ரூ.40 லட்சம் மதிப்புள்ள 114 சவரன் தங்க நகைகளை மீட்பு

கோவை மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட 10 நபர்கள் அதிரடி கைது... சுமார் 40 லட்சம் மதிப்புள்ள 114 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படையினருக்கு குவியும் பாராட்டு...


கோவை மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் பொருட்டு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், இ.கா.ப., உத்தரவின் பேரில் கோவை சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் முத்துசாமி, இ.கா.ப.,  அறிவுறுத்தலின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.



இந்நிலையில் சிறுமுகை காவல் நிலைய சரகத்தில் கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் பணத்துடன் வந்த டாஸ்மாக் சூப்பர்வைசர் விஜயானந்த் என்பவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து வழிப்பறி செய்ய முயற்சி செய்த 

1.சிவகங்கையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் ஆகாஷ்(19) 

2.சிவகங்கையை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் லோகநாதன்(24), 

3.மனோஜ்,    4.பட்டுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவரது மகன் ராஜா @ரவிக்கண்ணன்(20) மற்றும் 

5.சதீஷ் ஆகியோர்கள் இதுபோல் சிறுமுகை மற்றும் அன்னூர் பகுதிகளில்  வழிப்பறி மற்றும் வழிப்பறி முயற்சி வழக்குகளில் ஈடுபட்டதை கண்டறிந்து அவர்களை தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 14 ½ பவுன் தங்க நகைகளை மீட்டனர். 


இதேபோல் காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று வழக்குகளில் ஈடுபட்ட 

1.திருநெல்வேலியைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் சுரேஷ் (எ) சூட்டு சுரேஷ்(33) 

2.தென்காசியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மருதராஜ் (எ) சப்ஜெயில் ராஜா (19) 

3.தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில் பெருமாள் மகன் மருதுபாண்டி (எ) மருது (27) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 72 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 இரு சக்கர வாகனத்தையும்  மீட்டனர். 


இதேபோல் கோவில்பாளையம் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று வழக்குகளில் ஈடுபட்ட 

1.நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த உமேஷ் மகன் சாலமன்(20) மற்றும் 

2.தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தற்போது கோவை மயிலம்பட்டியில் வசித்து வரும் சந்திரசேகர் மகன் மணிகண்டன்(21) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார்  27 ½ பவுன் தங்க நகைகளை  மீட்டனர்.

மேற்படி வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை சிறப்பாக செயல்பட்டு கைது செய்து திருடிய சொத்துக்களை மீட்ட தனிப்படை காவல்துறையினரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.




No comments

Thank you for your comments