ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் சி.வெ.கணேசன்
ஆலடியில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி புதிய கட்டிடத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடியில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நமக்கு நாமே திட்டத்தில் 2022 - 23 ஆம் ஆண்டு 17-லட்சத்து 50 ஆயிரம் மதிப்ட்டில் புதிய வகுப்பரை கட்டிடம் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பச்சமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ஆலடி பியூலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்
இதில் ஒன்றிய பெருந்தலைவர் மலர் முருகன், ஒன்றிய பெருந்துணை தலைவர் பூங்கோதை குத்து விளக்கு ஏற்றினர் நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி, ராதிகா, பொறியாளர் கார்த்திக், உதவி தலைமை ஆசிரியர் உபகரசாமி, ஆசிரியர் அற்புதராஜ் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்


No comments
Thank you for your comments