மன்னம்பாடி எடையூர் செல்லும் தரை பாலம் திறப்பு
விருத்தாசலம் அருகே மன்னம்பாடி எடையூர் செல்லும் தரை பாலத்தை ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை சார்பில், கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்து மன்னம்பாடியிலிருந்து எடையூர் வரை செல்லும் சாலையில் உள்ள தரைப் பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர் .
மழைக் காலங்களில் தரைப்பாலம் மீது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. மேலும் எடையூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் விருத்தாசலம் வரவேண்டும் என்றால் அந்த தரை பாலம் வழியாக தான் வர வேண்டும் நிலையில் உள்ளன. ஆனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாதை துண்டிக்கப்பட்டு கிராமமே தீவு போல தனித்து விடப்படும் அவலநிலை இருந்து வந்தது.
இதனால் பல ஆண்டுகளாக வேதனையில் இருந்த அக்கிராம பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் உள்ளார்கள். இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அந்த பகுதியில் ரூபாய் 1 கோடியே 54லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் புதிய மேம்பாலம் ஒன்றை கட்டியது.
அந்த புதிய மேம்பாலத்தை இன்று கொட்டும் மழையில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார். இந்த விழாவில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ஆர் ராதா கிருஷ்ணன், வட்டாட்சியர் தனபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, ராதிகா, திமுக ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன் கனக கோவிந்தசாமி, மாவட்ட பிரதிநிதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பச்சமுத்து மாவட்ட இளைஞரணி மணிவேல் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

No comments
Thank you for your comments