Breaking News

பேருந்து நிலையத்தில் மழை நீரை நகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அகற்றம்

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மழை நீர் வெளியேற முடியாமல் இருந்ததை நகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அகற்றினர் 


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.

விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு, நாள்தோறும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  கிராமப்புறத்தில் இருந்தும்,  சென்னை, கோவை, திருச்சி,  சேலம், பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளும், விருத்தாச்சலம் பேருந்து நிலையம் வழியாக தான் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் பயணிகள் அதிக அளவில் கூட கூடிய,  விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில், நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழையினால், பேருந்து நிலையம் முழுவதும்,  முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை அறிந்த விருத்தாச்சலம் நகர மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ் உடனடியாக மழை நீரை அகற்ற உத்தரவிட்டார் 

அதனடிப்படையில்   விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சிவசங்கரன், வயலூர் ஒன்னாவது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் ஜேசிபி எத்தனை கொண்டு போர்க்கால அடிப்படைகள் விருத்தாசலம் பஸ் நிலையம், ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்தை வெகுவாக பாராட்டி உள்ளனர்

No comments

Thank you for your comments