Breaking News

தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டி கோரிக்கை மனு

தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள், மகளீர் சுய உதவி குழு மகளீர் கோரிக்கை மனு அளித்தனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம் பாக்கம் கிராமத்தைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட உக் கிராமங்கள் உள்ளது இந்த கிராமங்களில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் தங்களின் மருத்துவ தேவைகளுக்கு வாலாஜாபாத் காஞ்சிபுரம் செங்கல்பட்டு பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதன் காரணமாக தேவை ஏற்படும் நேரத்தில் சிகிச்சை பெறுவதற்கு கால நேரம் அதிகமாகி வருவதால் கிராம மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.


அதனால் தேவரியம்பாக்கம் கிராமத்தில் முழு நேர ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில், கிராம மக்களும், மகளிர் சுய உதவி குழு மகளீர்களும், நேரில் வந்து ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட வேண்டி கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் வழங்கினார்கள்.

கிராம மக்களின்  கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் அனைவரும் கலந்து சென்றனர்.

No comments

Thank you for your comments