வீட்டின் கதவை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருட்டு....
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே வையாவூர் சாலை, அண்ணா நகர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருட்டு.... காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலையில் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில், பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் கடந்த சில தினங்களாக உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலையில் இஸ்மாயில் தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒன்னரை கிலோ வெள்ளி பொருட்கள்,35 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
இதை தொடர்ந்து இஸ்மாயில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசருக்கு தகவல் அளித்த நிலையில் காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியட் சீசர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு ஆதாரங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து திருட்டுச் சம்பத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

.jpg)
No comments
Thank you for your comments