மழை ரெட் அலர்ட் ... சென்னை, காஞ்சி, வேலூர் உட்பட சில மாவட்டங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
சென்னை:
வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு சனிக்கிழமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பப்பட்டுள்ளது.
அறிவிப்பு 👉 https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf

No comments
Thank you for your comments