ரயில்வே சாலையில் உள்ள உழவர் சந்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது...
காஞ்சிபுரத்தில் மிக பிரபலமாக இயங்கி வந்த ராஜாஜி மார்க்கெட் தற்பொழுது ஓரிக்கை பகுதியில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் காய்கறி வாங்க பொதுமக்கள் 2 அல்லது 3 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இருந்து வந்த உழவர் சந்தை இப்பொழுது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இங்கு காய்கறிகள் தரமாகவும்,விலை மலிவாகவும், கூட்ட நெரிசலின்றி உடனுக்குடன் வாங்கிச் செல்ல ஓர் முக்கிய இடமாக விளங்கி வருகிறது.
இந்த உழவர் சந்தை காய்கறி மார்க்கெட்டை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வியாபாரிகள் கேட்டுக் கொள்கின்றனர்...


No comments
Thank you for your comments