அப்துல் கலாம் மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி
காஞ்சிபுரம் அப்துல் கலாம் மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரத்தில் அல் அன்சாரி சாரிட்டபிள் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் காஞ்சிபுரம்-ஒலிமுகமதுபேட்டை,தோப்பு தெருவில் உள்ள அப்துல் கலாம் மழலையர் மற்றும் ஆரம்ப பள்ளியில் 2-ம் ஆண்டு மாபெரும் கல்வி கண்காட்சி நடைபெற்றது.
இக்கல்வி கண்காட்சியில் 1-ம் முதல் வகுப்பு 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பங்கேற்று பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்த தங்களுடைய தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இக்கல்வி கண்காட்சியில் அல் அன்சார் சாரிட்டபிள் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் தலைவர் ஜாஹிர்,செயலாளர் தமிம் அன்சாரி,பொருளாளர் அஜ்மல்,கல்வி ஒருங்கிணைப்பாளர் சாதிக் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.




No comments
Thank you for your comments