விருத்தாசலம் அருகே போலி மருத்துவர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் போலி மருத்துவமனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் படி திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சோபானந்தம் மற்றும் ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் இருவரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆவட்டி கூட் ரோட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து அதில் மருத்துவமனை அமைத்து மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.
வீட்டில் உள்ள அறைகளில் ஏராளமான மருந்து மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர் போலி மருத்துவர் கைதான செய்தி தீய பரவியது இதனால் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்பட்டுள்ளது
No comments
Thank you for your comments