இலவச பயணம்.... பெண்களை தவறாக பேசும் நடத்துனர்கள்.. ஓட்டுநர்கள்... தொடரும் அவலம்... துறை ரீதியான நடவடிக்கை பாயுமா?
திருவள்ளூர் மாவட்டம் தற்பொழுது முதல்வராக பொறுப்பேற்றவுடன் மு க ஸ்டாலின் அவர்கள் மகளிருக்காக இலவசமாக பேருந்தில் பயணம் செல்லலாம் என்ற தேர்தல் அறிக்கையின் படி அனைத்து மகளிர்களும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்தனர்.
இதில் இவர்களுக்கு சில பேருந்துகள் மட்டுமே இலவசம் என்று அறிவித்ததனால் அந்த பேருந்துகளில் முன் பக்கமாகவும் பின்பக்கமாகவும் பிங்க் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டது இதனால் பேருந்து தொலைவில் வரும் பொழுது தாய்மார்களுக்கு இலவச பேருந்து என்று தெரிந்து பயணம் செய்தனர்
தற்பொழுது இந்த பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதால் ஓட்டுநர்களும் நடத்துனர்களும் இவர்களுடைய வாகனத்தில் செல்வது போல் தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் வேலைக்கு போகும் பெண்கள் பேருந்து செல்லும் பொழுது நிறுத்த வேண்டும் என்று கைகாட்டினால் உடனே ஓட்டுனர் பேருந்து நிறுத்தி அவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தனர்
தற்பொழுது இலவசமாக பேருந்து செல்வதால் நிற்ப்பதில்லை சில நேரங்களில் பேருந்து நிறுத்தத்தில் கூட நிற்காமல் செல்கிறது கை காட்டினாலும் பேருந்து நிற்பதில்லை இதனால் வேலைக்கு செல்ல மிகவும் அவதியாக இருப்பதாக வேலைக்கு செல்லும் தாய்மார்கள் குமுறுகின்றனர்.
ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...
எங்களுக்கு இலவசமாக இல்லை என்றாலும் எங்களை தரக்குறைவாக பேசாமல் நடந்து கொண்டாலே போதுமானது என்று தெரிவித்தனர்
இதுபோன்ற ஓட்டுநர் நடத்தினார்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் இதனை கண்காணிக்க வேண்டும் என்றும் தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments