Breaking News

குடிமனை பட்டா கேட்டு பாய், தலையணையுடன், அடுப்பு வைத்து சமைத்து நூதன குடியேறும் போராட்டம்

விருத்தாசலம் வட்டாட்ச்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடிமனை பட்டா கேட்டு பாய், தலையணையுடன்,  அடுப்பு வைத்து சமைத்து நூதன குடியேறும் போராட்டம் நடத்தினர்.



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திற்க்கு உட்பட்ட முகுந்தநல்லூர், கோ.பொன்னேரி, ஊ.மங்கலம், கோ.ஆதனூர், சின்னவடவாடி, இருளக்குறிச்சி, புதுப்பேட்டை ஆகிய கிராமங்களில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக மனு கொடுத்து காத்திருக்கும் மக்களுக்கு இலவசகுடிமனை பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தும் விருத்தாசலம் வட்டாட்சியரின் அலட்சியப் போக்கை கண்டித்து மனு கொடுத்த அனைத்து பயனாளிகளுக்கும் உடனே இலவசகுடிமனை பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்டி, பாய், படுக்கையோடு, பாத்திரம் பண்டத்தோடும் குடியேறும் போராட்டம் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது 

இந்தப் போராட்டமானது விருத்தாசலம் ஸ்டேட் பேங்க் அருகில் இருந்து புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை வந்து அடைந்தது காவல்துறையினர் அவர்களை உள்ளே விட மறுத்ததால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது பின்பு வட்டாட்சியர் அலுவலகத்திற்க்குள் அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள் வளாகத்திற்க்குள் பாய்தலையனை போட்டுபடுத்து கொண்டு அடுப்பு வைத்து சோறாக்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு சார் ஆட்சியர் பழனி சம்பவ இடத்திற்க்கு உடனடியாக வந்து பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு  பட்டா வழங்கப்படும் என கூறினார் இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 மாநகராட்சி அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன்
 ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...

இதில் மாவட்ட குழு கருப்பையன், வட்ட செயலாளார் அசோகன், நகர செயலாளார் கலைசெல்வன், வட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், ஜீவானந்தம், குமரகுரு, சுந்தரவடிவேல், இளங்கோவன், ஜெயமணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments