Breaking News

காஞ்சிபுரத்தில் தேசிய மாணவர் படை சார்பில் ரத்ததான முகாம்

காஞ்சிபுரம், நவ.27 -

காஞ்சிபுரத்தில் தேசிய மாணவர் படையும்,ஹெச்டிஎப்சி வங்கி கிளையும் இணைந்து பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை தன்னார்வ ரத்ததான முகாமை நடத்தினார்கள்.


தேசிய மாணவர் படையின் 75 வது ஆண்டு விழாவையொட்டி காஞ்சிபுரம் மற்றும் தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படையும் காஞ்சிபுரம் ஹெச்டிஎப்சி வங்கியும் இணைந்து ரத்ததான முகாமை நடத்தினார்கள்.


முகாமை கமாண்டிங் ஆபீசர் என்.எஸ்.மஹரா பங்கேற்று தொடக்கி வைத்தார். பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் இ.சுரேஷ் தலைமையிலான குழுவினர் 52 பேரிடம் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வங்கியின் சமூகசேவைப்பிரிவு அதிகாரி டி.சிவதாஸ்,தேசிய மாணவர் படையின் கேப்டன் எம்.செந்தில்தங்கராஜ், தேசிய மாணவர் படையின் அலுவலர்கள் எஸ்.கோவிந்தராஜ், எஸ்.சக்திவேல், எஸ்.தெய்வசிகாமணி ஆகியோர் உட்பட தேசிய மாணவர் படை மாணவர்களும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments