திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுகவினர் தங்க தேர் இழுத்து வழிபாடு
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA பிறந்த நாளையொட்டி மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் திமுகவினர் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA பிறந்தநாளை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் M.S.கதிரவன் ஏற்பாட்டின் பேரில் திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மாங்காடு நகர செயலாளர் பட்டூர்.S.ஜபருல்லா,மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன்,ராமு அவைத் தலைவர் மகேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.

No comments
Thank you for your comments