Breaking News

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி தங்கம் வென்ற ஹோட்டல் தொழிலாளியின் மகள்

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி  தங்கம் வென்ற மேலூர் ஹோட்டல் தொழிலாளியின் மகள், மேலும் சாதனை படைக்க மத்திய, மாநில அரசுகள்  உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.





மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளநாதன்பட்டி பகுதியை சேர்ந்த ஆபிரகாம்-அருள் செல்வி தம்பதியரின் மகள் ஷிபா கெத்சியால் ஆபரகாம்,தந்தை ஆபரகாம் ஒரு ஹோட்டல் தொழிலாளி ஆவார்,மேலூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியின் மாணவியான ஷிபா கெத்சியால் தற்போது மதுரை லேடி டோக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார், 

பள்ளிப் பருவத்திலேயே பாக்சிங் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவரான இவர்,மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம்,மற்றும் வெள்ளி என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார், கல்லூரியில் சேர்ந்த பின்னர் கிக்பாக்சிங்கில் தொடர்ந்து கூடுதலாக பயிற்சி எடுத்து வரு கிறார்.

இந்த நிலையில் டெல்லி டால்கடோரா  விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சர்வதேச கால் குத்து சண்டை போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று ஜோர்டான், உஸ்பெக்கிஸ் தான்,வீராங்கனைகளோடு கால் இறுதிப் போட்டியிட்டியிலும், இந்திய வீராங்கனையோடு அரை இறுதிப்போட்டியிலும் போட்டியிட்டு பின்னர்,இறுதிப் போட்டியில்  செளத்கொரியா வீராங்கனையை தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார், 

வெற்றிக்கழிப்போடு ஊர் திரும்பிய மாணவி ஷிபா கெத்சியாலுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்,சக மாணவிகள்,உறவினர்கள்,மற்றும் புதிய ஏதேன் ஏஜி சபையினர் மலர் மாலைகள், மற்றும் பொன்னாடைகள் அணிவித்து மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்பளித்தனர், 

பெற்றோர்கள் ஆனந்தக்கண்ணீரோடு ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

2028 ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நிச்சயமாக தங்கம் வென்று இந்திய நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் எனவும்  உறுதி மிளிர தெரிவித்தார்.

மேலும் தமக்கு கிக்பாக்சிங் பயிற்சி அளித்த சித்ரஞ்சன்,காசி பிரேம் மற்றும் பொருளாதார உதவி செய்தவர்கள் ,ஏழ்மையான சூழலிலும் தங்கம் வெல்லும் அளவிற்கு தமக்கு உற்சாக மூட்டி உன்னால் முடியும் என தன்னம்பிக்கையூட்டி உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தி வரும் தமது பெற்றோர்களுக்கும், இந்த தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என மிகுந்த நெகிழ்ச்சியோடு தெரிவித்த மாணவி ஷிபா,மாலை மரியாதை வரவேற்பு குறித்து தங்கம் வென்றதை காட்டிலும் இது பன் மடங்கு தமக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது எனவும் தெரிவித்தார், 

மேலும் தன்னைப் போன்ற பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவிகள் தங்கம் வெல்லும் அளவிற்கு விளையாட்டில் சாதனை படைத்திட,மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார், 

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கிக்பாக்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க மதுரை மாவட்டத்தில் இருந்து சென்று தங்கப் பதக்கம் வென்ற 6 மாணவிகளில் வெள்ளரிப் பட்டியை சேர்ந்த வர்ஷிணி ராஜ பாண்டி, மற்றும் வெள்ள நாதன்பட்டியை சேர்ந்த ஷிபா கெத்சியால் ஆபரகாம் என இந்த இரண்டு மாணவிகள் மேலூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது ஆகும்.

No comments

Thank you for your comments