Breaking News

மனைவி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம்  திருமுல்லைவாயில் காவல் எல்லைக்கு உட்பட்ட தனியார் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் செந்தில் வயது(38) என்பவர் வசித்து வந்தார். 

இவர் தனியார் கொரியர் நிறுவனத்தில் 18 ஆண்டு காலமாக வேலை செய்து வந்தார் இவர் தீபாவளி விடுமுறைக்கு பிறகு வேலைக்கு செல்லாமல் குடித்து வந்ததாக தெரிகிறது 

இதனால் இவர் குடித்துவிட்டு வரும்போது  தெல்லாம் மனைவி மாலதிவயது (26) என்பவர் சண்டை போடுவார் இவர் சண்டை போட்டுக்கொண்டு தனது குழந்தை பிரதிக்ஷா வயது (4) கடந்த 15.11.2022 அன்று மாலை அவரது அம்மா வீடான கருவூர் மாவட்டத்திற்கு சென்றுவிட்டார் 

👆 10% இடஒதுக்கீட்டால் என்னென்ன ஆபத்து?..
அனைத்து கட்சி கூட்டத்தில் பட்டியலிட்ட
முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இதனால் அதிக மன வேதனையில் இருந்த செந்தில் அதிகமாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டின் அறைக்குள் துப்பட்டாவால் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துவிட்டார். இந்த செய்தியினை அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தெரிவித்தனர் 



உடனே காவல்துறையினர் இறந்தவர் உடலை பரிசோதனைக்காக கே எம் சி மருத்துவமனைக்கு அனுப்பி மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்

No comments

Thank you for your comments