Breaking News

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்

விஜயலட்சுமி வயது(34) கணவர் சிவராமன் வயது(38) சிவராமன் என்பவர் சினிமா துறையில் டிசைன் இன்ஜினராக பணியாற்றுவதால் நேற்று (18.11.2022) அன்று வீட்டுக்கு வரவில்லை இதனால் தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு விஜயலட்சுமி என்பவர் அருகில் உள்ள மாமனார் பாலாஜி வீட்டில் இரவு தங்கி விட்டு இன்று (19.11.2022) காலை 9 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தவுடன் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்த இரண்டு சவரன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்  திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்

No comments

Thank you for your comments