Breaking News

பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்...

தமிழ்நாடு, சமூக நல துறையின் சார்பில், 2023 ஆம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு, சமூக நல துறையின் சார்பில், 2023 ஆம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் உலக மகளிர் தின விழா மார்ச் 2023 ல் வழங்கப்பட உள்ளது. 

மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்த பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் புகைப்படம், சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவாக அறிக்கையுடன் கருத்துருவினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து அதன் 2 நகல் மற்றும் சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று பெற்று 10.12.2022 க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் மாவட்ட சமூக நல அலுவலகம், (பழைய ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கட்டிடம் முதல் தளம் மாவட்ட ஆட்சியரகம் வளாகம்) காஞ்சிபுரம் என்ற முகவரியில் இரு பிரதிகளை நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.






No comments

Thank you for your comments