காஞ்சிபுரம் ஸ்ரீசபரிவாசன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம், நவ.18 -
காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் திரௌபதி சமேத ஸ்ரீதர்மசாஸ்தா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீசபரிவாசன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ளது திரௌபதி சமேத ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோயில். இக்கோயில் வளாகத்தில் ஸ்ரீசபரிவாசன், ஸ்ரீபாலகணபதி, ஸ்ரீபாலமுருகன் சுவாமிகளுக்கு தனித்தனியாகவும் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இவற்றுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் காஞ்சிபுரம் சர்வதீர்த்திக் குளம் ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் பூஜகர் ஏ.வி.சதீஷ்குமார் சிவாச்சாரியார் தலைமையில் வியாழக்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கின.
வெள்ளிக்கிழமை மகா பூர்ணாகுதி தீபாராதனைக்குப் பின்னர் யாகசாலையி லிருந்து புனிதநீர்க்குடங்கள் சிவாச்சாரியார்களால் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதனையடுத்து மூலவர் ஸ்ரீசபரிவாசனுக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம்,விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன.
பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவினை சிறுகாவேரிப்பாக்கம் பொதுமக்கள், ஐயப்ப பக்தர்கள், இளைஞர்கள் இணைந்து செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments