இலவச வேலைவாய்ப்பு பயிற்சியில் குரூப்-2 தேர்வில் 69 பேர் தேர்ச்சி
காஞ்சிபுரம், நவ.17-
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் குரூப்-2 போட்டித்தேர்வர்களுக்காக நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பில் 69 பேர் தேர்ச்சியடைந்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் ஆர்.அருணகிரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தமிழக அரசின் வேலைவாய்ப்புத்துறை வேலைதேடுவோர்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் போட்டித் தேர்வர்களுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...
இவ்வகுப்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக மொத்தம் 352 பேர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு இணைய வசதி, நூலக வசதி, அனுபவமிக்க பயிற்சியாளர்களின் பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதன் மூலமாக அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய குரூப்-2 முதல் நிலைத் தேர்வில் 69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் முதன்மைத் தேர்வையும் சிறப்பான முறையில் எழுத தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். எந்த வித கட்டணமும் செலுத்தாமல் 69 பேர் வேவைவாய்ப்பு அலுவகத்தில் படித்து தேர்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இதன் மற்றொரு பகுதியாக வேலை தேடுவோருக்காக தமிழக அரசு வீட்டிலிருந்தபடியே பயிற்சி வகுப்புகள், பாடக் குறிப்புகள், மாதிரித் தேர்வுகள் ஆகியனவற்றை எழுத்து வடிவில் ஆடியோ, வீடியோவாக இணையம் வாயிலாக வழங்கி வருகிறது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுப்பணித் தேர்வுகள் மற்றும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் வழிகாட்டுகிறது.
இந்த இணையதளத்தை இலவசமாகவும் பார்வையிடவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி போட்டித்தேர்வுகள் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளுமாறும் ஆர்.அருணகிரி தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.தணிகைவேலன் உடன் இருந்தார்.
No comments
Thank you for your comments