ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் பள்ளி மாணவ-மாணவிகள்... இந்த அவலத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?
விருத்தாசலம் அருகே மணிமுக்தா நதியில் கட்டப்பட்டுள்ள மேமாத்தூர் அணைக்கட்டு தற்போது பெய்த மழையினால் நிரம்பி வழிந்து ஆற்றில் வெள்ளம் செல்வதால் பத்துக்கும் மேற்பட்ட கிராமப் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து பள்ளிகளுக்கும், பல்வேறு வேலைகளுக்கு நல்லூர் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மேமாத்தூர் பகுதியில் மணிமுக்தா நதியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பு அணை கட்டப்படுவதற்கு முன்பு ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது இதன் வழியாக பட்டி, பரூர், எம். புதூர், கோனான்குப்பம், எடச்சத்தூர்,உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமத்து பொதுமக்கள் தினசரி நல்லூர் பகுதிக்கு விவசாய வேலை மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பள்ளிகளுக்கும் சென்று வந்தனர்.
4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை
இந்த தடுப்புஅணை கட்டிய பிறகு ஏற்பட்ட மழை வெள்ள காலத்தில் அணையின் உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் தற்போது பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அந்த அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் தற்பொழுது வரை ஓடிக்கொண்டிருப்பதால் அந்த தரை பாலம் அடித்து சொல்லப்பட்ட நிலையில் அப்பகுதியில் மிகுந்த ஆழம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது.
ஆபத்தை உணராத பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நல்லூர்பகுதியில் உள்ள பள்ளிக்கு, வருவதற்காக அந்த ஆற்றை ஆபத்தான முறையில் கடந்து வருகிறார்கள். இதனால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது
எனவே உடனடியாக அப்பகுதியில் நிரந்தர தீர்வாக மேம்பாலம். அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசைவலியுறுத்தி வருகின்றனர்.
No comments
Thank you for your comments