Breaking News

பேருந்தில் ஏறமுடியாததால் மாணவர்கள் பொதுமக்கள் இருதரப்பினர் இடையே கடும் மோதல்... வயலூர் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு

விருத்தாசலம் அடுத்த சின்ன வடவாடி கிராமத்தில் இருந்து, சற்று நேரத்திற்கு முன்பு, அரசு பேருந்து, பயணிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களை ஏற்றி கொண்டு விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.




அப்போது பேருந்தில் அதிகளவு இருந்த கூட்டம் காரணமாக பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி வந்து கொண்டிருந்தனர். 

🔥மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில்
 4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை

அப்போது வயலூர் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்த போது பேருந்து நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவர்கள் மற்றும் அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாததால் பேருந்தில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் இருதரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் இருந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை அனுப்பி வைத்தனர்.

 மாநகராட்சி அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன்
 ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...

இதன் காரணமாக தாக்குதலில் காயம் அடைந்த 5க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதனை அடுத்து  வயலூர் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments