ராமநத்தம் அருகே போலி நகையை அடகு வைக்க வந்த நபர் கைது
விருத்தாசலம் அடுத்த ராமநத்தம் அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் மோதிலால் என்பர் நகை அடகு கடை நடத்தி வருகிறார் இவரது அடகு கடைக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒரு ஜோடி போலி வலையலை எடுத்து கொண்டு தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது என்று கூறி அடகு கடையில் போலி நகையை அடகு வைக்க வந்துள்ளார்.
நகை கடை உரிமையாளர் மோதிலால் அந்த பெண் கொண்டு வந்தது போலி நகை என்பதை தெரிந்து கொண்டு ராமநத்தம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை
ராமநத்தம் போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் சேலம் மாவட்டம் அண்ணதானப்பட்டியை சேர்ந்த ரோஸ்லின் என தெரியவந்து இவர் ஏற்கனவே இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் சிறுபாக்கத்தில் போலி நகையை அடகு வைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் மீது ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
No comments
Thank you for your comments