Breaking News

ரவுடிகளில் ஏரியா ஆன கிச்சிபாளையம் பகுதியில் ரவுடிகள் திருந்திய நிலையிலும் சேலம் காவல் துறையினர் தொல்லையினால் மீண்டும் ரவுடியாகும் அவல நிலை...

 சேலம் முக்கிய நகரமான  ரவுடிகளில் ஏரியா ஆன கிச்சிபாளையம் பகுதியில் ரவுடிகள்  திருந்திய நிலையிலும் சேலம் காவல் துறையினர் தொல்லையினால் மீண்டும் ரவுடியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 


இதனைதொடர்ந்து இச்சம்பவத்தை எதிர்த்து அம்பேத்கர் பார்ட்டி ஆப் இந்தியா என்ற கட்சித் தலைவரிடம் முறையிட்டதனால் கட்சி தலைவர் சி அம்பேத்கர் என்பவர் தற்போது அவர் அலுவலகத்தில் சில ஆலோசனைகளை நடத்தினார் 

இதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை  பட்டியல் இனத்தைச் சார்ந்த கிச்சிபாளையம் கஸ்தூரிபாய் தெருவை சார்ந்த சூரியமூர்த்தி வயது 60 என்பவர் பல வழக்குகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக ரவுடி பட்டியில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது 

இதனை தொடர்ந்து இவர் மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் கடந்த காலங்களில் செய்யப்பட்ட குற்றச்சம்பங்களுக்கு மன்னிப்பு கேட்டு விட்டதாகவும் இனிமேல் எந்த ஒரு பொது சொத்திற்கும் பொது மக்களுக்கும் தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று ஆட்சியர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளிடம் உறுதிமொழி கடிதத்தை  வழங்கியதாக கூறப்படுகிறது 

இதனை தொடர்ந்து மீண்டும் ரவுடி பட்டியலில் நீங்கள் உள்ளீர்கள் என்று மீண்டும் மீண்டும் தனது குடும்பத்தையும் தனது பகுதியைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களையும் அச்சுறுத்தலை சேலம் டவுன் காவல் நிலையம் மற்றும் கிச்சிப்பாளையம் போலீசார் ரவுடி பட்டியலில் உள்ளீர்கள் என்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும் மன்னிப்பு கடிதம் எழுதிய திருந்திய ரவுடி சூரிய மூர்த்தி அப்பகுதியில் உள்ள இளைஞர்களையும் பள்ளி மாணவர்களையும் காப்பாற்றிட தான் அம்பேத்கார் பார்ட்டி ஆப் இந்தியா என்ற நிறுவன தலைவரை அணுகியதாகவும் கூறினார்

இதனை தொடர்ந்து அக்கட்சியின் சி, அம்பேத்கர் மாநிலத் தலைவர் இது பற்றி பேசுகையில் ரவுடி பட்டியலில் இருந்து திருந்தி வாழ நினைக்கும் இது போன்ற ஏராளமானோர் மன்னிக்கப்பட்டு அரசு உதவி உடன் வாழ்ந்து வருகின்றனர் 

சூரியமூர்த்தி மற்றும் அப்பகுதியில் வாழும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி பள்ளி மாணவர்களை அடிக்கடி சேலம் கிச்சிபாளையம் போலீசார் மற்றும் டவுன் காவல் நிலையம் ஆகியோர் தொல்லை கொடுத்து வருவதாகவும் இதை வன்மையாக கண்டிப்பதாகவும் மேலும் இது பற்றி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது திரும்பி வாழும் மனிதரை மீண்டும் மீண்டும் ரவுடியாக சித்தரித்து அவர்களுக்கு தொல்லை கொடுத்து ரவுடி என்ற பட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் இது போன்ற செயலில் போலீசார் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைவிட வேண்டும் இதனால் தான் இன்று தமிழக அரசையும் காவல்துறையையும் வன்மையாக கண்டிப்பதாக அம்பேத்கர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி தலைவர் கூறினார்

No comments

Thank you for your comments