Breaking News

கல்வியே வலிமை மிக்க பேராயுதம்... எம்எல்ஏ எழிலரசன் பேச்சு

காஞ்சிபுரம், நவ.28-


கல்வியே வலிமை மிக்க பேராயுதம் என காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடந்த வானவில் மன்றத்தை தொடக்கி வைத்து எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் பேசினார்.

காஞ்சிபுரம் அருகே நசரத்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு தலைமை வகித்தும்,குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தும் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் பேசியதாவது,

பிறரால் திருட முடியாதது கல்வி,பிறருக்கு கொடுக்க,கொடுக்க குறையாததும் கல்வி,வலிமை மிக்க பேராயுதம் என்றாலும் அது கல்வியாகத்தான் இருக்கும்.அது ஒன்று தான் மனிதனை மேம்படுத்தும்.இதை உணர்ந்து தான் பெண்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சரால் புதுமைப்பெண் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 

பெண்களை படிக்க வைக்காமல் திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்கள் என்பதற்காக கொண்டு வரப்பட்ட புதுமைத் திட்டமாகும்.உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 52 சதவிகித மக்கள் கல்வி பயின்றுள்ளனர்.ஆனால் இந்தியா முழுவதும் 23 சதவிகிதம் பேரே கல்வி பயின்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பேசினார்.

விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வி.வெற்றிச்செல்வி,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பி.வள்ளிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளியின் தலைமை ஆசிரியை கே.விஜயலட்சுமி வரவேற்றார்.

விழாவில் உதவித் திட்ட அலுவலர் தனசேகரன்,முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் காந்திராஜன்,மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.சந்துரு,சாலினி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவில் பள்ளி மாணவர்களால் செய்து வைக்கப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியையும் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் பார்வையிட்டார்.

இவ்விழாவில் கைப்பந்து விளையாட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அப்பள்ளி மாணவி ரோஷினிக்கு ஊக்கத்தொகையாக தனது சொந்த நிதியாக ரூ.5ஆயிரத்தையும் வழங்கினார்.படவிளக்கம்.. கைப்பந்து விளையாட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி ரோஷினியை பாராட்டி சான்றிதழ் வழங்கிய எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன்

No comments

Thank you for your comments