Breaking News

மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க மானியம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 உறுப்பினர்கள் கொண்ட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க ஒரு இலட்சம் மானியம் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 உறுப்பினர்கள் கொண்ட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர் மகளிருக்கு தலா ஒரு இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது.

அரசாணை எண்.68, நாள்.20.08.2022 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (சிஉதி) துறையில் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பில் 14ல், 36 ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 04 பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 50 உறுப்பினர்கள் கொண்ட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க ஆணை வரப்பெற்றுள்ளது.

 அதில் காஞ்சிபுரம்  மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர் மகளிர்களுக்கு பால் உற்பத்தியாளர் 50 உறுப்பினர்கள் கொண்ட சங்கம் அமைக்க ஒரு இலட்சம் மானியம் வழங்கப்படும். 

குடும்ப ஆண்டு வருமானம் மூன்று இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், கறவைமாடு வைத்துள்ள மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள மகளிர் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகள் tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்து பயன்பெறலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments