தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்...
CPSயை ரத்து செய்ய வேண்டும், DA வழங்கிட வேண்டும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்பிலும் மாவட்ட தலைவர் நாராயணசாமி தலைமையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பக்தவச்சலம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு எந்த பணிகளையும் வழங்க கூடாது,பள்ளி இறுதி தேர்வுகள் நெருங்கும் சமயத்தில் மண்டல ஆய்வுகளை நடத்தி கற்பித்தல் பணியை முடக்க கூடாது, ஜூலை 1-ல் இருந்து முடக்கிவைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனடியாக நிலுவை தொகையுடன் வழங்கிட வேண்டும்,முடக்கி வைக்கப்பட்டுள்ள E.Lஐ ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் பாஸ்கரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

.jpg)
No comments
Thank you for your comments