Breaking News

இ-நாம் திட்டத்தின் கீழ் வியாபாரிகள் விலை போட மறுப்பு... ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடிய அவலம்.. விவசாயிகள் வேதனை

விருத்தாசலத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் வியாபாரிகள் விலை போட, ஒத்துழைப்பு தராததால், தேதி குறிப்பிடாமல்,  ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டதால் விவசாயிகள்  வேதனை அடைந்தனர்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மிகப்பெரிய அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு,  விருத்தாசலம் அதன் சுற்றுவட்டார பகுதி மட்டும் இல்லாமல்,   கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த, நெல், மணிலா, எள்ளு, கம்பு, கேழ்வரகு, சோளம், உளுந்து உள்ளிட்ட தானிய விளை பொருட்களை,  விற்பனை செய்வதற்கு தினமும் 1000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.



இந்த நிலையில் இ-நாம் திட்டத்தின் கீழ், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யக்கூடிய விளைபொருட்களுக்கான,  விலை பட்டியலை செல்போன் அல்லது கணினி மூலம் போட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதால், வியாபாரிகள் விலை போட மறுத்து வருகின்றனர்.

தனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த விளைப் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் வியாபாரிகள் விலை போட்டால் மட்டுமே செயல்படும் என்பதால், தேதி குறிப்பிடாமல்,  ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டதாக அறிவிப்பு ஒட்டப்பட்டது.



இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல், வீட்டிலேயே  விளைபொருட்களை வைத்துள்ளனர்.



வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே உள்ள பிரச்சனை  எப்பொழுது   தீரும் என்றும், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு தங்களை கொண்டு செல்லவில்லை என  விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments

Thank you for your comments