மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் கலைத் திருவிழா போட்டி
மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், “மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டி நடத்தப்படவுள்ளது” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிகொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
கலைத் திருவிழா போட்டிகள்
6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஒரு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்படவுள்ளது, போட்டிகள் தனி நபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம்
ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...
6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1. கவின்கலை / நுண்கலை, 2. இசை (வாய்ப்பாட்டு), 3. கருவி இசை, 4. நடனம், 5. நாடகம், 6. மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழும்
9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1. கவின்கலை / நுண்கலை, 2. இசை (வாய்ப்பாட்டு), 3. கருவி இசை - தோற் கருவி, 4. கருவி இசை துளை – காற்றுக் கருவிகள், 5. கருவி இசை தந்திக் கருவிகள் 6. இசைச் சங்கமம் , 7. நடனம், 8. நாடகம், 9. மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழும்
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1. காண்கலை / நுண்கலை, 2. இசை வாய்ப்பாட்டு, 3. கருவி இசை, தோற் கருவி, 4. கருவி இசை – துளை / காற்றுக்கருவி, 5. கருவி இசை – தந்திக் கருவிகள், 6. இசைச் சங்கமம், 7. நடனம், 8. நாடகம், 9. மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழும் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. போட்டிகள் தனி நபராக அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம் ஒருவர் ஏதேனும் மூன்று தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிக பட்சமாக பங்கு பெற முடியும்.
பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களை (முதலிடம்) வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள்(முதலிடம் மற்றும் இரண்டாமிடம்) மாவட்ட அளவிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள்(முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்
மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிகையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்காணும் அட்டவணையின்படி கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது.
பள்ளி அளவில் 23.11.2022 முதல் 28.11.2022 க்குள்
வட்டார அளவில் 29.11.2022 முதல் 05.12.2022க்குள்
மாவட்ட அளவில் 06.12.2022 முதல் 10.12.2022க்குள்
வட்டார மற்றும் மாவட்ட அளவில் பங்கு பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து வகை அரசுப்பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் இக்கலைத் திருவிழா போட்டிகளில் பெருமளவு பங்கேற்க பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments