சிறுபான்மையினர் மாணவ / மாணவியர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும்,
11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர்/ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை மற்றும்
தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 15.11.2022 மற்றும் 30.11.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதியான சிறுபான்மையின மாணவ / மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15.11.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு 30.11.2022 வரையிலும் மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...

No comments
Thank you for your comments