உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் முடவன் முழுக்கு சிவ பூஜை விழா
காஞ்சிபுரம் பாலாற்றில் திருஞானசம்பந்தர் இறைப்பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் முடவன் முழுக்கு சிவ பூஜை விழா விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் பாலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாள் ஸ்ரீ திருஞானசம்பந்தர் இறை பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் முடவன் முழுக்கு விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டும் மண்ணால் செய்த சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
ரவிச்சந்திர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மேல்மருவத்தூர் சித்தர் பீடம் சொற்பொழிவாளர் கந்தன் அவர்களின் சொற்பொழிவும் நடைபெற்றது உழவாரப்பணி தலைவர் கவியரசு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோ பூஜை, அஸ்வபூஜை, வடுக பூஜை, கன்னியா பூஜை, சுவாசினி பூஜை. உள்ளிட்ட பூஜைகளுடன் சிறப்பு தூபதீப ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு ரவிக்கை மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் பாலாற்று மணலில் லிங்கம் செய்து பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சிவபெருமானின் பேரருளை பெற்று சென்றனர்.
.jpg)
.jpg)

No comments
Thank you for your comments