Breaking News

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, பெயர் நீக்கம் செய்ய படிவம்,, வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறுதல்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 01.01.2023-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்று வருவதால் 01.01.2023-ம் நாளன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ம் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள கல்வி நிலையங்களில் வருகின்ற 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

எனவே நேரில் வந்து உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்று ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கொடுத்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments