ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் துப்புரவு பணிக்காக 11 வாகனங்கள் பயன்பாட்டிற்காக துவக்கம்
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1வது மற்றும் 2வது மண்டலத்தில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் துப்புரவு பணிக்காக 11 வாகனங்களை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் தொண்டன் அண்ணன் இ.கருணாநிதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
உடன் மண்டல தலைவர்கள் வே.கருணாநிதி, இ.ஜோசப் அண்ணாதுரை, சுகாதார பணி குழு தலைவர் இரா.நரேஷ்கண்ணா, பம்மல் வடக்கு பகுதி செயலாளர் த.ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி துப்புரவு அலுவலர் துப்புரவு ஆய்வாளர்கள் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
.jpg)

No comments
Thank you for your comments