முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் 10.11.2022 அன்று மாலை 4.00 மணிக்கு வியாழக்கிழமை முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, முன்னாள் படைவீரர் சிறப்புக் குறை தீர்வு நாள் கூட்டம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்த விதவையர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையுமாறும், மேலும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு முப்படைவீரர் வாரிய கூட்டமும் நடைபெறும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments