சாலையோரம் ஆக்கிரமித்த வாகனங்களால் விபத்து... இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே முதியவர் பலி
காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த முதியவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமா உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்தனர்.
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் தனது இருசக்கர வாகனத்தில் காமராஜர் வீதியில் சென்று கொண்டிருந்த பொழுது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக பன்னீர்செல்வம் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது உரசியதில் பன்னீர்செல்வம் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.
சாலையில் விழுந்த பன்னீர் செல்வத்தின் மீது அரசு பேருந்தின் பின் பக்க சக்கரம் ஏறியதில் பன்னீர் செல்வம் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆட்கள் தேவை!காலச்சக்கரம் நாளிதழுக்கு!
செய்தி மற்றும் விளம்பரம் சேகரிக்க துடிப்பு மிக்க செய்தியாளர்கள், விளம்பர பிரதிநிதிகள் மாவட்டம் மற்றும் தாலுக்கா வாரியாக தமிழகம் முழுவதும் உடனே தேவை. சிறிய அளவில் முதலீடு செய்து நாளிதழை அவர்தம் நேரடி பொறுப்பில் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்ய விரும்பும் முகவர்களும் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடன் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளவும். Advt.,தொடர்புக்கு - 9360005566
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த விஷ்ணு காஞ்சி மற்றும் போக்குவரத்து போலீசார் உயிரிழந்த பன்னீர்செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்குவரத்து விதி முறைகளை காவல்துறையினர் தீவிரமாக அமல்படுத்தி வந்தாலும், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெ ட் அணியாமல் வந்த முதியவர் அரசு பேருந்து மோதி தலைநசுங்கி உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரம் காமராஜர் வீதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி சாலையை ஆக்கிரமித்துள்ளதே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அந்த வழியாக நடை பாதையினர், வாகன ஓட்டிகள் என அனைவரும் தடுமாறுவதாக தெரிவித்துள்ளனர்.


No comments
Thank you for your comments