வயலூர் 1- வது வார்டில் நகர சபா கூட்டம்... தலைமை நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி
வயலூர் 1- வது வார்டில் நகர சபா கூட்டம் நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது
திமுக தலைமையிலான அரசு கிராமப்புறங்களில் கிராம சபை கூட்டம் நடப்பது போல நகரப்புறங்களில் நகர சபா கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் இன்று நகர சபா முதல் கூட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி வயலூர் 1 -வது வார்டு நகர சபா கூட்டம் நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது
கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் சேகர், கட்டிட பொறியாளர் சேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பாக நடத்தினர்
ஆட்கள் தேவை!காலச்சக்கரம் நாளிதழுக்கு!
செய்தி மற்றும் விளம்பரம் சேகரிக்க துடிப்பு மிக்க செய்தியாளர்கள், விளம்பர பிரதிநிதிகள் மாவட்டம் மற்றும் தாலுக்கா வாரியாக தமிழகம் முழுவதும் உடனே தேவை. சிறிய அளவில் முதலீடு செய்து நாளிதழை அவர்தம் நேரடி பொறுப்பில் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்ய விரும்பும் முகவர்களும் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடன் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளவும். Advt.,தொடர்புக்கு - 9360005566
இதில் கிராமப்புறங்களில் 100 நாள் திட்டம் வழங்குவது போல நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தினை அமுல்படுத்த வேண்டுமென பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இதனை ஏற்றுக் கொண்ட நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆணையாளர் சேகர் விரைவில் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைத்து நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர்
இதேபோல துப்புரவு பணியாளருக்கு மாதம் 100 ரூபாய் சம்பளம் வழங்கியதை அதை உயர்த்தி மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என ஆணையாளர் தெரிவித்தார் மேலும் புதிய குடிநீர் தொட்டி அமைத்து சுத்தமான சுகாதாரமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும், சுடுகாட்டு பாதை சாலை அமைத்தல், மின்விளக்கு அமைத்தல், குரங்குகளை பிடித்து வனத்துறை இடம் ஒப்படைத்தல் நகராட்சி துவக்க பள்ளியில் சுற்றி உள்ள பழுதடைந்து சுற்றுச்சுவரை அகற்றி புதிய சுற்றுச்சூழல் அமைத்தல் மேலும் பள்ளியை சுற்றியுள்ள செடி கொடிகளை அகற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்களை ஏகமனதாக நகராட்சி கூட்டத்தில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் சேகர் தெரிவித்துள்ளார்
இதில் வயலூர் 1 - வார்டில் உள்ள பொதுமக்கள் நகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடசுப்பிரமணியன், திமுக மாவட்ட பிரதிநிதி பழனிச்சாமி, ரங்கராஜன், இல்லம் தேடி கல்வி ஆசிரியைகள் மணிமேகலை, அம்பிகா, ஆனந்தி ஜம்புலிங்கம், இலக்கியா, ஜெயபால், குருமூர்த்தி, ஜெகதீசன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்


No comments
Thank you for your comments