காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக காலியிடங்கள் அறிவிப்பு
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை மற்றும் தேசிய நலக்குழுமம் மாவட்ட நலச்சங்கம் (District Health Society) மூலமாக தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக
பகுதி சுகாதார செவிலியர் (SHN)/
நகர்புற சுகாதார மேலாளர் (UHM)-2 மற்றும்
கணினி மேலாளர்/தரவு மேலாளர் (SYSTEM MANGER/DATA MANAGER)-1
ஆகிய பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு (Notification) மற்றும் இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவமானது https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் 18.11.2022 அன்று மாலை 05.00 மணிக்குள், நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments