Breaking News

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 14.11.2022 (திங்கள்கிழமை) அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சுப் போட்டிகள்  காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர்  கல்லூரியில் நடைபெற உள்ளது.  இப்போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு முற்பகல் 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 02.00 மணிக்கும் தொடங்கப்பட உள்ளன.

கல்லூரி  மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் கல்லூரிக்கு 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தெரிவுசெய்தும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பள்ளிகளின் தலைமையாசிரியர்களே ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து  போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ / மாணவியருக்கு 1. குழந்தைகள் தின விழா, 2. ரோசாவின் ராசா, 3. ஜவகர்லால் நேருவின் தியாகங்கள், 4. நூல்களைப் போற்றிய நேரு, 5.அண்ணல் காந்தியின் வழியில் நேரு, 6.இளைஞரின் வழிகாட்டி நேரு ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவ / மாணவியருக்கு, 1.இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு, 2. நேரு கட்டமைத்த இந்தியா, 3. காந்தியும் நேருவும், 4. நேருவின் பஞ்சசீலக் கொள்கை, 5.உலக அமைதிக்கு நேருவின் தொண்டு, 6. அமைதிப்புறா – நேரு ஆகிய தலைப்புகளிலும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. 


இதேபோன்று பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட  அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/-  என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள்  இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசுத் தொகை ரூ.2000/- வீதம் வழங்கப் பெறவும் உள்ளன. 

இதில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா. ஆர்த்தி, இ.ஆ.ப.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.      

No comments

Thank you for your comments