காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் சுதர்சன யாகம் விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காக சுதர்சன யாகம் விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ ஆலயங்களில் ஒன்றானதும் அத்தி வரதர் ஆலயம் என புகழ்பெற்ற ஆலயமான ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும் நோய் நொடியற்ற வாழ்வு பெறவும் 48 நாட்கள் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று நிறைவு நாளான இன்று சுதர்சன யாகம் நடைபெற்றது.
இதில் ரங்கராஜ பட்டாச்சாரியார் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு சிறப்பு யாகம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மகாபூர்ணாஹுதியும் பட்டு வஸ்திரங்கள் யாகத்தில் சமர்ப்பித்து சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டது.
இவ்விழா ஏற்பாடுகளை grb சில்க்ஸ் உரிமையாளர் பாலாஜி மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர் அனைவருக்கும் ஆலய நிர்வாகம் சார்பில் பொன்னாடைகள் அணிவித்து பிரசாதங்களும் வழங்கப்பட்டது
இவ்விழாவிற்கு ஒத்துழைப்பு அளித்த ஆலய அதிகாரிகள் பட்டாச்சாரியார்கள். ஆலய ஊழியர்கள் அனைவருக்கும் ரங்கராஜ பட்டாச்சாரியார் நன்றிகளை தெரிவித்தார்.
.jpg)



No comments
Thank you for your comments