அரசு ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இம்முகாமில் அரசு மருத்துவமனை மற்றும் சவீதா மருத்துவமனை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை, எம்.ஜி.எம்.மருத்துவமனை, சாய் மருத்துவமனை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டு இலவசமாக மருத்துவ ஆலோசனைகள், இரத்த பரிசோதனைகள், நுரையீரல், இருதயம், கண், எலும்பு உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் செய்தனர்.
இம்முகாமில் 65 அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையை சேர்ந்த 95 மருத்துவர்கள் உட்பட மொத்தம் 160 மருத்துவர்கள் பங்கேற்று இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அரசுப்பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உட்பட மொத்தம் 403 பேர் பயன்பெற்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இம்முகாமில் காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பி.ஸ்ரீதேவி, துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு. பிரியாராஜ் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.




No comments
Thank you for your comments