களக்காட்டூர் சிவன் கோயிலில் 108 சங்காபிஷேகம்
காஞ்சிபுரம், நவ.28-
காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் உள்ள காமாட்சி அம்மன் சமேத அக்னீசுவரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் சமேத அக்னீசுவரர் திருக்கோயில்.பழமையான இக்கோயிலுக்கு தினசரி பூஜைகள் நடத்திட ராஜராஜசோழன் நன்கொடை கொடுத்தது இக்கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் கார்த்திகை மாத 2 வது சோமவாரத்தை முன்னிட்டு அக்னீசுவரருக்கு 108 சங்காபிஷேகமும் பின்னர் 36 வகையான சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தன.
காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து வேத விற்பன்னர்கள் ஆலயம் வந்திருந்து சங்காபிஷேகத்தை சிறப்பாக நடத்தினார்கள்.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் முன்னாள் ஸ்ரீகாரியம் செல்லப்பா உட்பட சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

No comments
Thank you for your comments