வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.3,92,575/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (21.11.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 240 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சித்தேரிமேடு கிராமத்தை 5 பயனாளிகளுக்கு ரூ.3,92,575/- மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கொடி நாள் நிதியாக ரூ.5,10,000/- காசோலையினை மாவட்ட ஆட்சியரிடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ச.வேதபுரி அவர்கள் வழங்கினார். மேலும், கவுகாத்தியில் நடைபெற்ற தேசிய அளவிலான 1000 மீட்டர் தடகளப் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்த திரு.எஸ்.கார்த்திக் என்ற மாணவனை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.புண்ணியகோட்டி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் திரு.கு.பிரகாஷ் வேல், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு எஸ்.ரமேஷ், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments
Thank you for your comments