காஞ்சிபுரம் மாநகரம் 2-வது பகுதி கழக திமுக, 20-வது வட்ட கழகத்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
காஞ்சிபுரம் மாநகரம் 2-வது பகுதி கழக திமுக, 20-வது வட்ட கழகத்தின் சார்பில் விஜய கிராமணி தெருவில் பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
20-வது வட்டம் அவைத் தலைவர் K.வெங்கடேசன் தலைமையிலும் வட்டக் கழக செயலாளர் மார்க்கெட் S.தனசேகரன் வரவேற்பிலும் பகுதி கழக பிரதிநிதி R.செந்தில்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகர திமுக 2-வது பகுதி கழகச் செயலாளர் S.சந்துரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் இரண்டாவது முறையாக திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கூறி பாராட்டி வாழ்த்து தெரிவித்தும்,
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக, மாவட்ட செயலாளராக உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்தும்,
மாவட்ட துணை செயலளராக காஞ்சிபுரம் நாடளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் தேர்வு செய்தற்க்கு வாழ்த்து தெரிவித்தும்
காஞ்சிபுரம் திமுக மாநகர செயலாளராக CKV.தமிழ்ச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்தும்,
திமுக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் எம் எல் ஏ உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மறைந்த 20-வது வட்ட பிரதிநிதி V.ரவிராஜ் வட்ட கழகத்தின் சார்பாக இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் 20-வது வட்டக் கழக துணைச் செயலாளர்கள் ஆர், செல்வக்குமார், எ.ரதி, வட்ட பொருளாளர் அப்துல்சுக்கூர்,வட்ட இளைஞரணி செயலாளர் ரிஷ்வான்,வட்ட பிரதிநிதிகள் வி. எம் உமாசந்தர்,எஸ்.அன்சர், என்.கருணாகரன், எஸ். முனுசாமி ஆகியோர் முன்னிலையில் 2வது பகுதி கழக இக்கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் இ. ஜாபர்,ஆ.முருகன்,பகுதி கழக துணை செயலாளர்கள் வி. கோவிந்தராஜ் , பகுதிகழக பொருளாளர் வ.ராமமூர்த்தி,வட்ட கழக நிர்வாகிகள் ஜே. இளங்கோவன்,தேவராஜ், எஸ். சரவணன் ,எம். குமாரசாமி, எஸ் .குமார், ஏ.அல்தாப் ,எ.வெங்கடேசன், எஸ். பஷீர், எம். பன்னீர்செல்வம், எம்.சிவா, எம் வெங்கடேசன், பி வேணு,மு.ரகுராம்,ஜா.சோயப்கான், ரா.சசிகுமார்,ஜாகப், வி. பாஸ்கர், கே.மோகன் தாஸ்,ஏ.தீனதயாளன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு அனைவராலும் நிறைவேற்றப்பட்டன.
மேலும் வட்ட இளைஞர் அணி செயலாளர் ஆர்.ரிஸ்வான், நன்றி உரை ஆற்றினார்.
.jpg)
.jpg)

No comments
Thank you for your comments