காமராஜபுரம் ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவிலில் மனதில் நினைத்ததை அருள்வாக்காக கூறும் அதிசயத் திருக்கோவில்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட கம்பராசபுரத்தில் ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவில் உள்ளது
அக்கோவிலில் வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் வெகு விமர்சையாக பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறும்.
ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவிலில் தினந்தோறும் பொதுமக்கள் மனதில் நினைத்ததை அருள்வாக்காக கூறுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
திருக்கோவிலுக்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வதாகவும் அவர்கள் மனதில் நினைத்ததை அருள்வாக்காக கூறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதற்கான பரிகாரங்களையும் கூறி மனதில் நினைத்தது நடந்து விட்டதென்றால் ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவிலில் வரக்கூடிய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும் திருமண வரம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் மனதில் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறினால் குழந்தை வரம் வேண்டிய பக்தர்கள் திருக்கோவில் வளாகத்திலேயே வளைகாப்பு நடத்துவதும் வரக்கூடிய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் மற்றும் திருமண வரம் வேண்டி வந்த பக்தர்களும் அக்கோயிலில் அம்மாவாசை அன்று வரக்கூடிய பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கி நேரத்திக்கடனை செலுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
.jpg)
.jpg)


No comments
Thank you for your comments