Breaking News

9-11-2022 அன்று இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்பு தொடக்கம்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்பு இம்மாதம் 9 ஆம் தேதி தொடங்கப்பட இருப்பதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி முன்பாக இந்தியன் வங்கியின் சார்பில் சுயதொழில் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் இம்மாதம் 9 ஆம் தேதி இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது.

வயது 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு வரை  படித்திருந்தாலே போதுமானது. இப்பயிற்சியானது பெண்களுக்கு மட்டும் 30 நாட்களுக்கு நடைபெறும். 

பயிற்சி பெறுவோருக்கு இரு வேளையும் தேநீர்,மதிய உணவு, பயிற்சி மற்றும் அதற்கான கையேடுகள்,பயிற்சி உபகரணங்கள் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கபடவுள்ளது.பயிற்சிக்குப் பின்னர் இந்தியன் வங்கியின் சான்றிதழும் வழங்கப்படும்.

குறைவான இடங்களே இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரை முன்பதிவு செ ய்து கொள்ளுமாறும் மேலும் விபரங்களுக்கு 044-27268037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments